சிறகுகள் - திரை விமர்சனம்

சிறகுகள் - ஒரு அமைதியான அருமையான திரை படம்.

விக்ரம் மற்றும் ராதிகா இருவரின் நட்பு,
அதை நிச்சியமாக புரிந்து கொள்ள முடியாத இருவரின் வாழ்கை துணைகள்,
அந்த நட்பு நீடிக்க வேண்டும் என்றும் என்று நினைக்கும் இருவரின் குழந்தைகள்,
எங்கோ ஒரு மூலையில் தனது நட்பு காதலாக இருக்க கூடுமோ என்று கண்ணியமான தோரணையில் நினைக்கும் விக்ரமின் கதாபாத்திரம்,
தனது கணவர் திருந்தி விட்டார் என்று ஒரு நிமிடம் பூரணமாக நம்பும் ராதிகா,
ஒரு ஆண் ஆதிக்கவாதியின் 'சிறகுகள் வெட்டபட்ட புறா' போன்ற மனைவியாக இருப்பதை விட தன் குடும்பத்துக்காக நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும், சுதந்திர சிறகுகளும் உள்ளவளாக, தன் குழந்தைகளுக்கு என்றும் ஒரு சிறந்த தமிழ் அன்னையாக இருக்க எடுத்த முடிவு,
விக்ரமின் மனைவி திருந்தி வீடு சேருவது,

இவை எல்லாம் அற்புதம்.

இந்த கதை லண்டன் மாநகரில் படமக்கபாடுள்ளது. அதிகமான கதாபாத்திரங்கள், கதைக்கு சம்மந்தம் இல்லாத நகைச்சுவை காட்சிகள், தேவை இல்லாத நடன காட்சிகள், இவை எதுவும் இல்லாமல், குடும்பம் கட்டு குலையாமல் இருக்க கணவன் மனைவி இருவரின் பூரண ஒத்துழைப்பு தேவை என்று மிக அழகாக, ஒரு படம் எடுத்து இருகிறார்கள். இது என்று வந்த படம் என்று எனக்கு தெரியாது. சன் தொலைகாட்சியில் நேற்று மதியம் கண்டேன்.

சிறகுகள் - பார்க்க வேண்டிய படம்.

Comments

Popular posts from this blog

How are you placed today?

Sargam - A 1992 Movie Review

Make a difference......