Posts

Showing posts with the label Tamil

Edhu? or What?

ஆசை எளியது. அடக்கம் வலியது. வறுமை கொடியது. உண்மை கசப்பது. குடும்பம் கூடுவது. கோபம் சிறியது. ஒற்றுமை பெரியது. நட்பு நிகரற்றது. பாசம் பிணைப்பது. நேசம் நல்லது. காதல் இனிப்பது. அன்பு தூயது. சொந்தம் சிறந்தது. கொடை உயர்ந்தது. ஆத்மன் நிலைப்பது. நம்பிக்கை உகந்தது. நேற்று முடிந்தது. இன்று உள்ளது. நாளை நம்புவது. அவ்வை பாட்டி சொன்ன முதல் மூன்று வரிகளை ஒட்டி யோசித்தவை. நன்றி : தமிழ் மொழி / அவ்வையார் / என் தமிழ் ஆசிரியர்கள்/ என் பாட்டி ராஜம்மாள் அவர்கள்.

Kannukku Vandha Gadhi

சில நாட்களுக்கு முன்பு ஒரு தமிழ் பாடலில் "கஞ்சா வெச்ச கண்ணு " என்ற வாக்கு காதில் விழுந்தது. சரியாக காதில் வாங்கினேனா என்று கேட்டால் இல்லை. வெச்ச கண்ணா, இல்லை அடிச்ச கண்ணா என்று கேட்டால் தெரியாது. ஏன் என்றால் மனசில் பதிந்தது கண்ணுக்கு கஞ்சாவை வைத்து ஒரு பாடல் வரி எழுதப்பட்டுள்ளது. உண்மையில் எனக்கு தூக்கி வாரி போட்டது. ஏன்யா கயல் விழி , மான் விழி, மீன் விழி, மை விழி, மலர் விழி இதெல்லாம் தோன்ற வில்லையா? கவிதை என்பது தொலை தூரம் போய் விட்டது இன்றைய தமிழ் திரை பாடல்களில். கவிதை திறன் இல்லாமல் போய் விட்டது என்று நான் சொல்ல வில்லை.மக்கள் கடந்த காலத்தை விட இன்னும் அதிகம் திறமை உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். இருந்தும், இன்றைய பாடல்களில் சொல் நயம், கவி நயம் இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய விஷயம்.

Minnalai Naan

மத்தாப்பு சிரிப்பு; சிணுங்கும் சைக்கிள் மணி ஓசை; திரும்பி பார்த்தேன் ஒரு முறை; மின்னல் வேகத்தில் என்னை தாண்டியது... பளிச்சென்ற பல் வரிசை; துரு துரு கண்கள்; ரெட்டை பின்னலின் ரிப்பன்; மடித்து இட்ட துப்பட்டா; மீண்டும் திரும்பி பார்த்தேன்; இம்முறை எனது ரெட்டை பின்னல் காலங்களை.... அழகிய மின்னலாய்  என் மனதில்; அன்றைய நான் தோன்றி மறைந்தேன்!

திருவிழா.....

Remembered this rhyme when I was walking on the road one rainy evening in Bangalore..... வானத்திலே திருவிழா வழக்கமான ஒரு விழா இடி இடிக்கும் மேகங்கள் இறங்கி வரும் தாளங்கள் மின்னல் ஒரு நாட்டியம் மேடை வான மண்டபம் தூறல் ஒரு தோரணம் தூய மழை காரணம் எட்டு திசை காற்றிலே ஏக வெள்ளம் ஆற்றிலே தவளை மட்டும் பாடுமே தண்ணீரிலே ஆடுமே அகன்ற வெளி வேடிக்கை ஆண்டு தோறும் வாடிக்கை This was the tamil rhyme I learnt when I was six years old... It is about a rainy day - Thunder takes the role of music, lightning takes the role of a dancer, sky becomes the stage and frog enjoys singing in the rain... The rhyme ends saying : This fun-to-watch event happens every year. I do not remember the poet's name, but I surely remember the verse-speaking sessions with this rhyme, every monsoon.

A Nice Tamil Poetry

I just happened to remember this tamil poetry. For those who dont understand the poetry, I can tell you, its about a few basic things that you should wish for in life. Aasaipadu Pennae Aasaipadu...Osaipadaamal nee Aasaipadu... Kaalai nera Kaatrukku...Aalai Izhukkum Kuyilukku.. Punnagai Seiiyum Anbukku...Podhum Endra Manasukku.. Poramaiyilla Pugazhukku...Puthagam padikkum Iravukku.. Kalaiyilladha Varavukku...Kadanilladha Vaazhvukku.. Noilladha Ilamaikku...Thanimaiilladha Mudhumaikku... Aasaipadu Pennae Aasaipadu...Osaipadaamal nee Aasaipadu... Naalai Pookum Malarukku...Nalladhu Seiyyum Natpukku.. Sutham Niraindha Veetukku...Sonnadhu Ketkum Pillaikku.. Pasithu Unnum Vayitrukku...Paduthaal Urangum Padukaikku.. Aasaipadu Pennae Aasaipadu...Osaipadaamal nee Aasaipadu...