நல்ல கவிதை
நான் தமிழ் மொழியின் ஒரு நல்ல ரசிகை. கண்ணில் படும் நல்ல தமிழ் வலை பதிவுகள் எல்லாவற்றையும் படிக்கும் ஆர்வம் உண்டு. அப்படி ஒரு முறை என் கண்ணில் பட்ட தளம், நிலா ரசிகனின் அற்புத படைப்புகள் நிறைந்த உயிரோட்டமுள்ள தளம்.
அத்தளத்தில் முதலில் என்னை கவர்ந்த வரிகள் இதோ :
ஜன்னலோர படுக்கை
தினம் தினம் பௌர்ணமி
நினைத்தவுடன் மழை
சாலையோர பூக்கள்
அதிகாலை பனித்துளி
இரவு நேர மெல்லிசை
கள்ளமில்லா சிரிப்பு
பொய்யில்லா நட்பு
மீண்டும் ஒரு பாரதி
தினம் நூறு கவிதைகள்
தோல் சாய தோழன்
தலை கோத காதலி
தாய் மடி தூக்கம்
தூக்கத்தில் மரணம்
இவை யாவும் எதிர் பாரா மனசு!
என்ன ஒரு அருமை கனவு வலை இது ! இதில் எதுவுமே அதிக ஆடம்பர ஆசை இல்லை. நல்ல தொகுப்பு .
Comments
ஏன் அங்கே அங்கே ஆங்கில வார்த்தை எட்டி பாக்குது. படிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு..
இதோ ..
தோல்
தலை கோத காதலி
தாய் மடி தூக்கம்
தூக்கத்தில் மரணம்
இவை யாவும் எதிர் பாரா மனசு.
முடிந்தால் மாத்திடுங்க.. :-)
நக்கீரன் போல ஏதவாது தவறு சொல்லிகிட்டே இருக்கறதுக்கு மன்னிச்சுடுங்க. :-)