Avane Ivane Sivane - Gavanikka

அவனே இவனே என்று நினைக்காமல் சிவனே என்று
உள்ளே போறவனையும் வெளியே வரவனையும் மட்டுமே கவனிக்கவும்

நேற்று நடந்த யோகா வகுப்பில் நான் கற்ற மிக பெரிய பாடம் இது.

நாம் அனைவரும் நாள்தோறும் பல வேலைகள்  செய்கிறோம், செய்யாமல் இருக்கோம்,நாம் செய்யாமல் இருக்கும் பல வேளைகளில் நிதானமாக மூச்சு விட பழகுவதும் ஒன்று.

மூச்சு என்பது பாடல்களுக்கு சேர்கப்படும் ஸ்ருதியைபோல மிக முக்கியமானது. ஒரு பாடல் பாட தொடங்கும் முன்னதாக, செய்யபடுவது ஸ்ருதி சேர்த்தல் ஆகும். இந்த ஸ்ருதியை அடிப்படையாக வைத்து தான் பாடல் இயற்றபடுகிறது.

ஒரே பாடலை பல ஸ்ருதிகளில் பாடினால் அது வேறு வேறு பாடல்களாக தோன்றும். அதே போன்று மூச்சை விதம் விதமாக உபயோகிக்கலாம். அதில் எல்லா விதமும் சரியாக இருப்பதில்லை.

நாம் எல்லாரும் சரியாகதான் மூச்சு விடுகிறோம் என்று எண்ணினால் தவறாக விடுவது எப்படி என்று யோசிக்கத்தோன்றும்.அப்படி யோசித்ததில் தெரிய வந்தது தான் பிரணாயமம்.

ஒவ்வொரு நாளும்காலை எழுந்த உடன் நம் மூச்சாகிய ஸ்ருதியை சரியாக வாசித்தோம் என்றால் அன்றைய நாள் முழுவதும் மூச்சு சரியான ரீதியில்  இருக்கும். உடம்பின் இயக்கங்களும் சரியாக இருக்கும்.

அவனே இவனே என்று நினைக்காமல் சிவனே என்று
உள்ளே போறவனையும் வெளியே வரவனையும் மட்டுமே கவனிக்கவும்.

இதில் உள்ளே போகிறவர், வெளியே வருபவர், ரெண்டும் நம் மூச்சே ஆகும்.

ஒரு நல்ல யோகா வகுப்பில் பத்து நாள் பழகினால் சரியாக மூச்சு பயிற்சி செய்ய முடியும்.

பயிற்சி செய்து தான் பாருங்களேன். நான் தொடங்கியுள்ளேன்.நீங்களும் முயற்சி செய்யுங்கள். உங்கள் உடல் உங்களுக்கு நன்றி சொல்லும்.


Comments

Popular posts from this blog

How are you placed today?

Sargam - A 1992 Movie Review

Thappad - A slap!