Edhu? or What?
ஆசை எளியது.
அடக்கம் வலியது.
வறுமை கொடியது.
உண்மை கசப்பது.
குடும்பம் கூடுவது.
கோபம் சிறியது.
ஒற்றுமை பெரியது.
நட்பு நிகரற்றது.
பாசம் பிணைப்பது.
நேசம் நல்லது.
காதல் இனிப்பது.
அன்பு தூயது.
சொந்தம் சிறந்தது.
கொடை உயர்ந்தது.
ஆத்மன் நிலைப்பது.
நம்பிக்கை உகந்தது.
நேற்று முடிந்தது.
இன்று உள்ளது.
நாளை நம்புவது.
அவ்வை பாட்டி சொன்ன முதல் மூன்று வரிகளை ஒட்டி யோசித்தவை.
நன்றி : தமிழ் மொழி / அவ்வையார் / என் தமிழ் ஆசிரியர்கள்/ என் பாட்டி ராஜம்மாள் அவர்கள்.
Comments