Kannukku Vandha Gadhi

சில நாட்களுக்கு முன்பு ஒரு தமிழ் பாடலில் "கஞ்சா வெச்ச கண்ணு " என்ற வாக்கு காதில் விழுந்தது. சரியாக காதில் வாங்கினேனா என்று கேட்டால் இல்லை. வெச்ச கண்ணா, இல்லை அடிச்ச கண்ணா என்று கேட்டால் தெரியாது. ஏன் என்றால் மனசில் பதிந்தது கண்ணுக்கு கஞ்சாவை வைத்து ஒரு பாடல் வரி எழுதப்பட்டுள்ளது. உண்மையில் எனக்கு தூக்கி வாரி போட்டது.

ஏன்யா கயல் விழி , மான் விழி, மீன் விழி, மை விழி, மலர் விழி இதெல்லாம் தோன்ற வில்லையா?

கவிதை என்பது தொலை தூரம் போய் விட்டது இன்றைய தமிழ் திரை பாடல்களில். கவிதை திறன் இல்லாமல் போய் விட்டது என்று நான் சொல்ல வில்லை.மக்கள் கடந்த காலத்தை விட இன்னும் அதிகம் திறமை உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். இருந்தும், இன்றைய பாடல்களில் சொல் நயம், கவி நயம் இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய விஷயம்.

Comments

Popular posts from this blog

Sargam - A 1992 Movie Review

How are you placed today?

Make a difference......